Mar 27, 2016

நீ(ர்) இல்லாமல்......




நீ(ர்) இல்லாமல்........




நீ(ர்) இல்லாமல்
நாம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றோம்.
தாகம் தீர்ப்பதற்கு தண்ணீர் இல்லை
கண்ணீர் இருக்கின்றது.
தண்ணீர் இல்லாமல் தேசம்
கண்ணீர் தேசமானது.

மழை, வெள்ளம் என்று
மழையை தூற்றி தூற்றி
மழை தொலந்துபோயுள்ளது.

கொளுத்தும் வெயில்
கொலைக்களமாய் மாறியிருக்கின்றது.

ஓய்ந்துபோன மழையினால்
பாய்ந்துவந்த அருவிகள்
காய்;ந்து போயுள்ளன.

மழை மலையேறிப்போய்விட்டதால்
நீர் மருந்தானது.
வரண்டுபோன பூமியில்
மனிதன் மட்டுமல்ல
பறவைகளும், பட்சிகளும்
மிருகங்களும், ஊர்வனகளும்
நீரின்றி துடித்துக்கொண்டிருக்கின்றன.
மெல்ல மெல்ல
செத்துக்கொண்டிருக்கின்றன.

சுட்டெரிக்கும் சூரியனை
சொல்லி குற்றமில்லை.
குற்றம் சொல்லும்
மானிடனிடம்தான்
குற்றமிருக்கின்றது.

மரம் நடுவோர் யாருமில்லை
எல்லோரும் நிழல் தேடிக்கொண்டிருக்கின்றோம்.
மழை வேண்டிக்கொண்டிருக்கின்றோம்.

நீதியும், நேர்மையும்
செத்துப்போன உலகிற்கு,
கொலையும், கொள்ளையும்,
விபச்சாரமும், கற்பழிப்பும்
மலிந்துபோன உலகிற்கு
மழை வந்துபோக
வெட்கப்படுகின்றது.

மலையளவு பாவங்கள்
மழையை மரணிக்கச்செய்திருக்கின்றது.
பாரினில் படையெடுத்து
பாவங்களை புதைத்துவிடுவோம்.
பாவிகள் நாம்
புனிதர்களாய் மாறிடுவோம்.
மண்ணில் மனிதத்தை
நிலைநாட்டுவோம்.

பாவங்களை போக்கி
மண் மலர
மழைபொழிவாய் மன்னவனே…..