புலம்பல்கள்
Dec 14, 2016
Sep 25, 2016
பாபேரியன் கரையோரமாய்.....
இந்த பாபேரியன் கரைதான்
என் பிறப்பிடம்
வசிப்பிடம்
என் பிஞ்சுகாலத்தின்
சொர்க்காபுரி…
நான் ரசித்த
முதல் கரை…
காலையிலிருந்து மாலைவரை
காலம் களைப்பின்றி
கரைந்துபோனதும் இந்த கரையில்தான்…
முதல் முதலாய்
கால் நனைத்த அனுபவம்
இன்றும் மனதில் ஈரமாய்….
மனம் விரும்பிய
மணல் வீடுகள் முதல்
இன்னும் எத்தனையோ
மணல் விளையாட்டுக்களும்,
செதுக்கல்களும், கிறுக்கல்களும்
அரங்கேரியதும் இந்த கரையில்தான்…
அராபிக்கடலில் இருந்து
இக்கரையில் கரையொதுங்கிய
கழிவுப்பொருட்கள்தான்
எங்கள் விளையாட்டுபொருட்கள்..
பாபேரியன் கரையில்
கூட்டத்தோடும் கும்மாளத்தோடும்
குளித்த நாட்கள்
இன்றும் மனக்கடலில்
அலையடித்துக்கொண்டிருக்கின்றன…
இரவுபகல் பாராது
கடற்கரையின் மணல்தரையில்
நண்பர்களோடு கதைபேசி
படுத்துறங்கிய ஞாபகங்கள்
இன்று பகல்கனவாய்
மிஞ்சியிருக்கின்றது….
பௌர்ணமி இரவுகளில்
நிலவிற்கு துணையாய்
விழித்திருந்த தருணங்களை
ஒவ்வொரு பௌர்ணமி இரவுகளும்
காதோரம் சொல்லிக்கொண்டிருக்கின்றன…
பாபேரியன் கரையில்
வீசும் காற்று
மனதிற்கும், உடம்பிற்கும்
தரும் இதம்
அலாதியானது…
அந்திமாலையில்
பாபேரியன் தீவும்
கலங்கரை விளக்கும்
சிவந்த வானமும்
விடைபெறும் சூரியனும்
தங்கக் கடலும்
கெமராவிற்கு விருந்தாகின்றன…
உள்ளத்தில் காயங்கள்
உள்ளபோது
இக்கரையிடம் சொல்லிப்பாருங்கள்
காயங்கள் மாயங்களாகும்…
சுனாமியில் சுருண்டபோது
இந்தக்கரை
என்னை விழுங்கமறுத்தபோது
வியந்துபோனேன்
இந்த கரையையும்,
இந்த கடலையும்
நான் நேசிப்பதுபோல்
இந்த கரையும்
என்னை நேசிப்பதை…
ரூமி ஹாரிஸ்.
May 20, 2016
பேருவளையிலிருந்து ஒரு ஸல்யூட்.....
பேருவளையிலிருந்து ஒரு ஸல்யூட்.....
பேருவளையிலிருந்து ஒரு ஸல்யூட்.......
கொழும்பு மற்றும் மத்திய மலைநாட்டின் பல பகுதிகள் மண்சரிவினாலும், வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டு கோடிக்கனக்கான சொத்துக்களும், நூற்றுக்கனக்கான உயிர்களும் காவுகொள்ளப்பட்டமை யாவரும் அறிந்ததே.
மண்ணில் புதைந்துபோன வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட இம்மக்களது இயல்புவாழ்க்கையினை மீட்கும் நோக்கில் ஏராளமான அமைப்புக்களும், இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும், தனி மனிதர்களும் தம்மால் இயன்ற பங்களிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் பல்வேறு சவால்களுக்கும், போராட்டங்களுக்கும் மத்தியில் முன்னெடுத்துவருகின்றமை பாராட்டுக்குரிய விடயமே. ஏனைய நாடுகளைப்போலல்லாது இலங்கையர்கள் ஜாதி, இனம், மதம் என்ற பேதங்களின்றி அனர்த்தமொன்று நிகழ்ந்தவுடன் துரிதகதியில் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சர்வதேச ரீதியில் நாமே முதலிடத்திலிருக்கின்றோம் என்று பெருமையடைவதில் பிழையில்லை என்றே நினைக்கின்றேன்.
தற்பொழுது மும்முரமாக நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்கங்களும், அமைப்புக்களும், தொண்டு நிறுவனங்களும் நிறுவன ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமையினால் ஒவ்வொரு குழுவினதும் பங்களிப்புக்களும், சேவைகளும் சமூக வலைத்தளங்களினதும், ஊடகங்களினதும் உதவியினால் சர்வதேசம் வரை சங்கமித்திருக்கின்றதெனலாம். மேலும் அவர்களது குறியீடை பிரதிபலிக்கின்ற பதாதைகளும், ஆடைகளும் இக்குழுவினரை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்திவிடுகின்றன. என்றாலும் தனிநபர்களாலும் சிறிய குழுக்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற மனிதாபிமான உதவிகள் அச்சிறிய குழுவினருடனேயே முடக்கப்படுகின்றது. தங்களது செயற்பாடுகள் விளம்பரப்படுத்தப்பட வேண்டுமென்ற நோக்கமோ, தாம் பிரபல்யமாக வேண்டுமென்ற ஆசையோ இச்சிறிய குழுக்களிடம் இருப்பதில்லை. மீட்பு நடவடிக்கைகளின் போது புகைப்படங்களை எடுப்பதற்கோ அல்லது அவற்றை பதிவேற்றுவதற்கோ அவர்களுக்கு நேரமும் வாய்ப்பும் இருந்திருக்காது. மாறாக தாங்களது சக்திக்கேற்ற மனிதநேய பணிகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமென்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பாகும். அவ்வாறானதொரு ஆர்ப்பாட்டமில்லாத, துணிசசலான ஓரு இளைஞர் குழுவை பற்றியே இந்த ஆக்கம் தொடரவிருக்கின்றது.
இலங்கையின் தென்மேற்கு கரையில் கொழும்பிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் அமையப்பெற்றுள்ள கரையோர நகரமே பேருவளை. இலங்கை முஸ்லிம்களின் முதல்குடியேற்றமாக வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ள பேருவளை நகரமானது இலங்கையின் முதலாவது முஸ்லிம் பள்ளிவாசலான மஸ்ஜிதுல் அப்றாறினையும், முதலாவது முஸ்லிம் பெண்கள் பாடசாலையான அல்பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் பெண்கள் பாடசாலையினையும், இலங்கை முஸ்லிம்களுக்கு அறிவொளி வீசிக்கொண்டிருக்கும் ஜாமிஆ நளீமிஆவினையும், இக்ரா தொழிநுட்ப கல்லூரியினையும், கெச்சிமலை தர்காவினையும், காதிரியதுன் நபவியா தரீக்காவின் கோட்டையான புகாரி தக்கியாவினையும் பெருமையோடு சுமந்துநிற்கின்றது. பேருவளையில் அமையப்பெற்றுள்ள அழகிய மீன்பிடி கிராமமே மருதானை. இக்கிராமத்தின் சனத்தொகையில் நூறு சதவீதமும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கிராமத்தின் அழகிற்கு அணி சேர்க்கும் வகையில் மருதானை கரையில் கம்பீரமாக பர்பரீன் தீவு காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பெரும் அபிமானத்தைபெற்ற இத்தீவு சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்றதாகும். மருதானை மக்களின் பிரதான ஜீவனோபாயமாக மீன்பிடி, வியாபாரம், இரத்தினக்கல் வியாபாரம், என்பன காணப்படுகின்றன. இம்மருதானை கிராமத்தின் மீனவர்களே எமது இந்த ஆக்கத்தின் கதாநாயகர்கள்.
அன்றாடம் பல சிரமங்களுக்கு மத்தயில் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து அதன்மூலம் பெறும் சிறிய வருவாய்மூலமே இம்மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை மேற்கொள்கின்றனர். புயல்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நாட்களில் இம்மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. அன்றயை நாட்களில் எதுவித வருமானமும் இல்லாமல் திண்டாடுவார்கள். பேருவளையிலோ அல்லது அதன் அயல் பிரதேசங்களிலோ இயற்கை அனர்த்தங்கள் நிகழ்கின்ற சந்தர்ப்பங்களில் இம்மருதானை மீனவர்கள்தான் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக முதலில் களமிறங்குகின்றனர். தமது உயிரினையும் பொருட்படுத்தாமல், எந்தவிதமான எதிர்பார்ப்புக்களுமின்றி மக்களை மீட்கின்ற மனிதாபிமான உதவிகளை துணிச்சலோடு மேற்கொண்டுவருகின்றனர். இறை திருப்தியினையும், இறை அருளினையும் முதலாய்கொண்டு எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களுமின்;றி, விளம்பரங்களுமின்றி தமது மீட்பு பணியினை மேற்கொள்ளும் இந்த ஏழை மீனவர்கள் உண்மையில் பாராட்டப்படவேண்டியவர்களே.
இவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கும், அசௌகரியஙகளுக்கும் மத்தியில் பல உயிர்களை இறைவனின் உதவியோடு காப்பாற்றியுள்ளனர். கடந்த காலங்களில் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நீரிழ் மூழ்கிய வியங்கல்லை, வெலிப்பன்னை மற்றும் ஏனைய பிரதேச மக்களை மீட்பதில் இம்மீனவர்களின் பங்களிப்பு அலாதியானது. இரவுபகல் பராது உண்ண உணவின்றி இம்மீனவர்கள் தங்களது வள்ளங்களில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் தென்மேற்கு கடலில் ஏற்பட்ட புயல்காற்று காரணமாக கடலில் தத்தளித்த சிங்கள மீனவர்களை மீட்பதில் கடற்படையினரே வியக்கும் அளவிற்கு இவர்களது செயற்பாடுகள் துணிச்சலாக அமைந்திருந்தன. கொந்தளித்துக்கொண்டிருந்த கடலின் ராட்சத அலைகளையும், புயல்காற்றினையும் எதிர்த்து இம்மீனவர்கள் சிங்கள மீனவர்களை கரைசேர்த்தனர்.
அந்தவகையில் வழமையைப்போன்றே மருதானை மீனவர்கள் இன்று கொழும்பிலும், அதன் புறநகரிலும் தங்களது வள்ளங்ககுடன் மீட்பு நடவடிக்கைகளில் களத்தில் இறங்கியுள்ளனர். தமது உயிரினையும் பொருட்படுத்தாது வெள்ளத்தில் தமது வீடுகளிலும், கல்வி நிலையங்களிலும் முடங்கியிருந்த ஏராளமான உயிர்களை மீட்டிருக்கின்றனர். இன்னும் மீட்டுக்கொண்டிருக்கின்றனர். சில அபாயகரமான வெள்ளம் சூழ்ந்த இடங்களில் படையினரே பின்வாங்கிய நிலையில் துணிச்சலோடு தமது வள்ளங்களில் சென்று காப்பாற்றியிருக்கின்றனர். வெல்லம்பிட்டியிலுள்ள ருகைய்யா பெண்கள் அரபுக்காலாசாலை மாணவிகள் ஐம்பது பேih மீட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் தாம் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்திலேயே செத்துக்கொண்டிருந்த ஏராளமானவர்கள் புன்னகையோடு கரைசோந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பல கல்விமான்களும், தனவந்தர்களும் தாமும் தம்பாடும் என்று ஒதுங்கியிருக்கின்ற வேளையில் கல்வித்துறையிலும், சமூக அந்தஸ்திலும் ஏதோ இம்மீனவ சமூகம் பின்னடைந்திருந்தாலும் அளப்பறிய மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விலைமதிப்பற்ற மனித உயிர்களை மீட்டுக்கொண்ருக்கின்றமை வரவேற்கத்தக்கதே. இம்மீனவ சகோதரர்கள் எம் மண்ணின் மைந்தர்கள் என்ற அடிப்படையில் எமது பேருவளை மக்கள் அனைவரும் எந்த பேதங்களுமின்றி இவர்களுக்கு ஒரு சல்யூட் அடிப்போமா? எத்தனையோ பேரின் கண்ணீரை புன்னகையாக மாற்றிய இவ்வேழை மீனவர்களின் வாழ்க்கையிலும் வசந்தம் வீச பிரார்த்திப்போம்!
ரூமி ஹாரிஸ் - பேருவளை

Mar 27, 2016
நீ(ர்) இல்லாமல்......
நீ(ர்) இல்லாமல்........
நீ(ர்) இல்லாமல்
நாம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றோம்.
தாகம் தீர்ப்பதற்கு தண்ணீர் இல்லை
கண்ணீர் இருக்கின்றது.
தண்ணீர் இல்லாமல் தேசம்
கண்ணீர் தேசமானது.
மழை, வெள்ளம் என்று
மழையை தூற்றி தூற்றி
மழை தொலந்துபோயுள்ளது.
கொளுத்தும் வெயில்
கொலைக்களமாய் மாறியிருக்கின்றது.
ஓய்ந்துபோன மழையினால்
பாய்ந்துவந்த அருவிகள்
காய்;ந்து போயுள்ளன.
மழை மலையேறிப்போய்விட்டதால்
நீர் மருந்தானது.
வரண்டுபோன பூமியில்
மனிதன் மட்டுமல்ல
பறவைகளும், பட்சிகளும்
மிருகங்களும், ஊர்வனகளும்
நீரின்றி துடித்துக்கொண்டிருக்கின்றன.
மெல்ல மெல்ல
செத்துக்கொண்டிருக்கின்றன.
சுட்டெரிக்கும் சூரியனை
சொல்லி குற்றமில்லை.
குற்றம் சொல்லும்
மானிடனிடம்தான்
குற்றமிருக்கின்றது.
மரம் நடுவோர் யாருமில்லை
எல்லோரும் நிழல் தேடிக்கொண்டிருக்கின்றோம்.
மழை வேண்டிக்கொண்டிருக்கின்றோம்.
நீதியும், நேர்மையும்
செத்துப்போன உலகிற்கு,
கொலையும், கொள்ளையும்,
விபச்சாரமும், கற்பழிப்பும்
மலிந்துபோன உலகிற்கு
மழை வந்துபோக
வெட்கப்படுகின்றது.
மலையளவு பாவங்கள்
மழையை மரணிக்கச்செய்திருக்கின்றது.
பாரினில் படையெடுத்து
பாவங்களை புதைத்துவிடுவோம்.
பாவிகள் நாம்
புனிதர்களாய் மாறிடுவோம்.
மண்ணில் மனிதத்தை
நிலைநாட்டுவோம்.
பாவங்களை போக்கி
மண் மலர
மழைபொழிவாய் மன்னவனே…..
Feb 28, 2013
இப்படியும் ஒரு காதல்
இப்படியும் ஒரு காதல்
ஓக்டோபர் மாதம் 4ம் திகிதி 1996ம் ஆண்டு. நானும் நண்பர்களும் குர்ஆன் மத்ரஸாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை. வீதியோரங்களில் எல்லோருமாய் அன்று நைரோபியில் நடைபெற்றுமுடிந்த இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கட் போட்டியினைபற்றி கருத்துக்களை பகிர்ந்துகொண்டிருந்தனர். ஒரு இளம் புதிய வீரர் பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகியுள்ளதாகவும் அன்றைய போட்டியில் சிக்ஸ் மழை பொழிந்து அதிவேகமான சதத்தை அடித்து பாகிஸ்தான் அணியினை வெற்றிபெறச்செய்ததாகவும் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கிரிக்கட் போட்டிகளை தொலைக்காட்சிக்கு முன்னிருந்து முழுவதுமாக பார்க்கும் வழக்கம் என்னிடம் அப்போது இருக்கவில்லை. யார் அந்த புதிய இளம் வீரர் என்பதனை அறிய எனக்கு ஆவலாக இருந்தது. அவரது அதிரடி துடுப்பாட்டத்தை இரசிப்பதற்கு அலாதியானதொரு ஆசை எனக்குள் ஏற்பட்டது. அந்த புதிய இளம் வீரரின் பெயர் ஷஹீட் அப்ரிடியென நாளடைவில் தெரியவந்தது. ஆனாலும் இத்தனைக்கும் நான் பாகிஸ்தான் இரசிகனல்ல. ஷஹீட் அப்ரிடியின் தீவிர இரசிகன் மட்டுமே. ஒரு சாதனை வீரனின் திறமையினை இரசிப்பதற்கான எனது ஆவல் நாளடைவில் அவரது பரமவிசிறியாக என்னை மாற்றிவிட்டது. அன்றிலிருந்து நான் பாகிஸ்தான் அணியின் போட்டிகளை தவறாமல் பாhத்துவருகின்றேன். எந்தளவிற்கென்றால் பாடசாலையினையும் கட் அடித்தவிட்டு ஷஹீட் அப்ரிடியின் ஆட்டத்தினை இரசிப்பேன். அப்ரிடியின் ஒவ்வொரு சிக்ஸர்களும் என்னை குஷிப்படுத்தின. அப்ரிடியின் தீவிர இரசிகனாக மாறிய பின்னர்தான் கிரிக்கட் மீது நான் அலாதியான பிரியம் வைத்தேன். என்னைப்பொறுத்தவரை அப்ரிடிதான் கிரிக்கட்டை எனக்கு அறிமுகப்படுத்தியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் கிடைக்கும் ஒய்வு நேரங்களில் கிரிக்கட்தான்.
அப்ரிடியின் ஆட்டத்தினை நேரடியாக கண்டுகளிக்கவேண்டுமென்பதுதான் எனது நீண்டநாள் ஆசை. அதற்கு உண்மையிலே நீண்டநாள் எடுத்தது. 2011ம் ஆண்டு உலகக்கிண்ணப்போட்டியில்தான் நான் அப்ரிடியை முதன்முதலாக நேரடியாக பார்த்தேன். 2011 பெப்ரவரி 26ம் திகதி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இலங்கை.பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியே அது. உண்மையிலே இப்போட்டி எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினை தந்தது. முதலாவது பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடி. இரண்டாவது அப்போட்டியின் சிறப்பாட்டக்காரரும் அப்ரிடி. இது உண்மையிலேயே எனக்கு பெருமகிழ்ச்சியினை தந்தது. மாறாக பாகிஸ்தான் வெற்றிபெற்றதோ, இலங்கை தோல்வியடைந்ததோ எனது மனநிலையில் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. எனக்கு இந்த போட்டியினை நேரடியாக கண்டுகளிப்பதற்கு நண்பன் வதீஸ் வருணன் வாய்ப்பினை ஏற்படுத்திதந்திருந்தான். அந்த போட்டியினை நான் பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த இரசிகர்களோடு சேர்ந்திருந்தே பார்த்தேன். அப்ரிடியோடு சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்கவேண்டுமென்றும் ஒரு பெரிய ஆசை எனக்குள் இருக்கின்றது. அப்ரிடியின் பற்றுதலினால்தான் நான் இந்த ஆக்கத்தினைக்கூட எழுதுகின்றேன்.
சிலர் என்னிடம் கேட்கின்றாhகள் ரூமி ஏன் நீங்கள் நூற்றுக்கனக்கான கிரிக்கட் வீரர்கள் இருந்தும் அப்ரிடி அப்ரிடி என இருக்கின்றீர்கள். அவர்களுக்கான பதில்தான் இந்த ஆக்கம். உண்மையில் நான் மட்டுமல்ல உலகின் எல்லா மூளைகளிலும் அப்ரிடியன்ஸ் இருக்கின்றார்கள். பாகிஸ்தானின் பரம எதிரியான இந்தியாவிலும் அப்ரிடியன்ஸ் அப்ரிடிக்காக கரகோஷமெழுப்பிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
Happy Birthday for a Cricketer who spent his half of his life for Cricket...
Entertain Billions of cricket fans through his bat, ball & field!
if you born in India you should have beat SRT's popularity!
wishing you a good End to your Int. career of Cricket!
BOOM BOOM is Great ambassador for cricket.

கிரிக்கெட் என்றால் அப்ரிடி.
அப்ரிடி என்றால் கிரிக்கெட்.
இதுதான் எனக்கு தெரிந்த கிரிக்கெட்.
இவர்தான் எனக்கு தெரிந்த அப்ரிடி.
Jan 10, 2013
இனியும் வேண்டாம் றிஸானாக்கள்.....
இனியும் வேண்டாம் றிஸானாக்கள்.....
நீ ஓர் உயிர்தான்
ஆனாலும் இலங்கை முழுவதுமே
உனக்காய் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றது
சகோதரியே…
ஊடகங்களிலெல்லாம் உன் மரணச்செய்தி
நீ செய்த சாதனைகளாலல்ல
உனக்கேற்பட்ட சோதனைகளால்….
பட்டினிச் சாவிலிருந்து
உன் குடும்பத்தாரை காக்க
பாலகி நீ
பாலைவனம் சென்றாய்
இன்று உன்சாவைப்பார்த்து
பாலைவனமானது இம்மண்…
கொளுத்தும் வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
உன் குடிசையில்
பட்ட கஷ்டங்களே
உன்னை அரபுக்கரையில்
கரையொதுக்கியது…..
ஒரு சிறுமியாய்
விளையாடித் திரியாமல்
குடும்ப சுமைகளை
உன் பிஞ்சு உள்ளத்தில்
எப்படித்தான் நீ
சுமந்துகொண்டாய்?
உன் குடும்பத்தினரின்
கண்ணீர் துடைக்கத்தான்
நீ பறந்துசென்றாய்…
ஆனால் இன்று உன்பிரிவால்
எங்கள் தேசமே கண்ணீரில்
முழ்கிக்கொண்டிருக்கின்றது சகோதரியே…
இறைவனின் கட்டளைக்கிணங்க
பரிசுத்தமாய் நீ கொல்லப்பட்டிருக்கின்றாய்…
இல்லை…..
நீதிமன்றம் அநியாயமாய்
உன் உயிரை பறித்திருக்கலாம்;;…
எப்படியோ உன் தூய்மையான
ஆன்மாவிற்காய் சுவனம்
காத்திருக்கின்றது சகோதரியே…
மன்னிக்கும் தேசம்
உன்னை மன்னிக்கவில்லை
மரணித்தாய்
இறைவன் உன்னை
மன்னித்திருக்கின்றான்….
உன் பிரிவு
எங்கள் தூக்கத்தை பறித்திருக்கின்றது…
இன்னும் சில நாட்களில் நாங்கள்
மறந்திடுவோம்;…
உன் உம்மா…வாப்பா..…
இறைவன்தான் அவர்களை
ஈடேற்றவேண்டும்..
இனிமேலும் இம்மண்
றிசானாக்களை
விதைக்காமல் இருக்கவேண்டும்…
மனைவியையும், மகளையும்
அடிமையாய் அனுப்பிவிட்டு
ஆண்டிகளாய் வாழும்
கோழைகளே....
விழித்தெழுங்கள்
இனியும் வேண்டாம் றிஸானாக்கள்....
கிழக்கிலங்கையில் சீதனம்
சீரழித்துக்கொண்டிருக்கின்றது.
அபலைக் குமரிகள், முதிர்கன்னிகள்
பாவம் என்ன செய்ய?
அப்பாவிகளாய்
அரபிகளின் அடிமைகளாகின்றனர்.
சீர்கெட்ட சீதனத்திற்காய்
சிலவேளை கற்பினையும்
இழந்தபின்னர்தான்
உங்களுக்கு
முந்தானை விரிக்கின்றனர்.
சிந்தியுங்கள்
இனியும் வேண்டாம் றிஸானாக்கள்....
ஹாஜிகள் ஸக்காத்தை
ஐநூறு, ஆயிரம் ரூபாய்களாய்
நூறு, இருநூறு பேருக்கு
பங்கிடாமல் ஓரிருவரிற்கு
முறையாக பங்கிட்டால்
நாளை றிசானாக்களும்
ஸதகாவாவது கொடுப்பதற்கு
தயாராக இருப்பார்கள்..
இனியும் வேண்டாம் றிஸானாக்கள்....
புதிய வருடத்தில்
புதிய சிந்தனைகளோடு
புதிய மானிடர்களாய்
புத்துயிர் பெறுவோம்!
எம். எச். அஹமத் ரூமி
Dec 28, 2012
சமூகவளைத்தளங்களில் Share செய்யும் போது….
சமூகவளைத்தளங்களில் Share செய்யும் போது….
M.H. Ahamed Roomy
மாஷாஅல்லாஹ்! இன்று உலகலாவிய ரீதியில் நாளாந்தம் புனித இஸ்லாத்தில் ஏராளாமானோர் இணைந்துகொள்கின்றனர். உண்மையிலேயே முஸ்லிம்கள் என்றவகையில் இது எமக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய விடயமே.
உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரார்கள், கலைஞர்கள், மொடல் அழகிகள், மதகுருக்கள், மாணவர்கள் என பல்வேறுதரப்பினரும் அல்லாஹ்வின் அருளால் அசத்தியத்திலிருந்து சத்தியத்தின் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அண்மைக்கால ஆய்வுகளின்படி உலகிலே வேகமாக பரவிக்கொண்டுவருகின்ற மார்க்கமாக புனித இஸ்லாம் திகழ்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
சில நபிமார்களின் பிள்ளைகள், சில நபிமார்களின் பெற்றோர்கள், சில நபிமார்களின் மனைவிமார்கள், சில நபிமார்களின் உடன்பிறப்புக்கள் இறைமறுப்பாளர்களாக வாழ்ந்துமடிந்ததை நாம் வரலாறுகளில் படித்திருக்கின்றோம். இறைவன் தான் நாடியவர்களுக்கே நேர்வழிகாட்டுகின்றான் என்பதனை இவ்வாறான வரலாற்று சம்பவங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். இறைவன் தனது திருமறையில் இதனை தெளிவாக கூறியிறுக்கின்றான்.
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழி கேட்டில் விட்டுவிடுகிறான். நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான். எனவே உம்முடைய உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு கவலைப்பட வேண்டாம். நிச்சயமாக அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்'. (அல்குர்ஆன் 35:08)
இறைவனின் நாட்டிப்படி இறைமறுப்பாளர்களாக இருந்து புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நற்செய்தியினை நாம் இன்று குறுந்தகவல்களிலும், மின்னஞ்சல்களிலும், சமூகவளைத்தளங்களிலும் பரிமாறிக்கொள்கின்றோம். இவ்வாறு சமூக வளைத்தளங்களில் பரிமாறிக்கொள்கின்றபோது நான் அவதானித்ததொரு விடயத்தினையே உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.
அதாவது புனித இஸ்லாத்தை ஏற்றுக்ககொண்ட நற்செய்தியினை பகிர்கின்றபோது அதில் ஒரு படம் இணைக்கப்பட்டிருக்கும். இப்படத்தை இரண்டாகப்பிரித்து Before என்று ஒரு பகுதியும் After என்று மறுபகுதியும் வேறுபடுத்தப்பட்டிருக்கும். இதில் முதலாவது படத்தில் குறித்தநபர் இறைமறுப்பாளராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை காட்டிருயிருக்கும். இரண்டாவது பாதியில் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் அவரது புதிய தோற்றத்தோடு புகைப்படம் காட்டப்பட்டிருக்கும். ஆண்களைப்பொறுத்தளவில் ஓரளவிற்கு பிரச்சினையில்லையென்றாலும் பெண்களைப்பொறுத்தவரை இது ஒரு பாரதூரமான பிரச்சினையென நான் நினைக்கின்றேன். உதாரணமாக ஒரு மொடல் அழகி இஸ்லாத்தை ஏற்ற நற்செய்தியை தாங்கிவந்திருக்கும் புகைப்படத்தில் அப்பெண் மொடல் அழகியாக இருந்தபோது அரைகுறை ஆடைகளோடு தனது அங்கங்களை வெளிக்காட்டிய ஆபாசமானதொரு புகைப்படம் போடப்பட்டிருக்கும். ஆனால் இரண்டாவது படத்தில் ஹிஜாபுடைய வாழ்ககையிலான ஒரு புகைப்படம் போடப்பட்டிருக்கும். இது உண்மையில் ஆர்வக்கோளாறினால் பரிமாற்பபடுகின்ற விடயமென நான் கருதுகின்றேன். உண்மையிலே அவர்களுடைய கருத்து என்னவென்றால் இவ்வாறு வழிதவறிச்சென்றுகொண்டிருந்த ஒரு பெண் இன்று அல்லாஹ்வின் உதவியால் நேர்வழிபெற்று கற்பொழுக்கத்தை பேணி வாழ்ந்துகொண்டிருக்கின்றாள் என்ற மகிழ்ச்சிகரமாக உண்மையினையே அவர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். எனினும் குறிப்பிட்ட அசிங்கமான புகைப்படத்தின் காரணமாக தவறானதொரு பகிர்வல்லவா மாற்றமடைகின்றது. குறித்த பெண்ணே தனது பழைய வாழ்க்கையினை கிள்ளியெறிந்தவிட்டு பாவமன்னிப்புத்தேடி சுவர்க்கத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்ற வேளையிலே எமது இஸ்லாமிய சகோதரர்களே அச்சகோதரியின் ஆபாசமான, அநாகரிகமான படங்களை பகிர்ந்தகொள்வது எந்தளவு முட்டாள்தனமானது.
நான் நாளொன்றில் குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் சமூகவளைத்தளிங்களில் செலவிடுகின்றபடியால் ஒவ்வொருவரினதும் பகிர்வுகளை நான் அவதானிக்கின்றேன். அந்தவகையில் இச்செயல் என்னை எரிச்சலூட்டிக்கொண்டிருந்ததொரு விடயமாக இருந்துவந்தது. உங்களுக்கும் ஒரு கசப்பான அனுபவமாக இது இருந்திருக்குமென நான் நினைக்கின்றேன். எனவே சமூகவளைத்தளங்களிலே உங்கள் நண்பர்களோடு இதனை பகிர்ந்துகொள்ளுங்கள். புனித இஸ்லாத்தில் நுழைந்துகொள்கின்ற மகிழ்ச்சிகரமான நற்செய்தியினை பகிர்ந்துகொள்வோம். இறைவனை புகழ்வோம். இன்ஷா அல்லாஹ்! ஓவ்வொரு பெண்ணினதும் கற்பொழுக்கத்தினை பேணக்கூடிய காவலர்களாக நாம் மாறுவோம்.
Subscribe to:
Posts (Atom)

.jpg)