Dec 14, 2016

அலப்போ அழைக்கின்றது..

அலப்போ அழைக்கின்றது..



செத்துப்போன மனிதர்களுக்கும்
செத்துக்கொண்டிருக்கும் மனிதத்திற்கும்
சர்வதேச மயானமாய் அலப்போ…
அழகிய அலப்போ
அழுகிக்கொண்டிருக்கின்றது.
அழுதுகொண்டிருக்கின்றது.
அழிந்துகொண்டிருக்கின்றது…
மடிந்துபோன மனிதர்களும்
இடிந்துபோன கட்டடங்களுமே
மிஞ்சியிருக்கின்றன.
சீக்கிரமாய்
சிதைந்துபோக
சிரியா ஒன்றும் சிறிய நாடல்ல
பலம்பெரும் ஷாம் தேசம் அது.
சிரியாவின் அவலம்
சிதைந்துபோயுள்ள அரபுலகிற்கும்,
சமாதானம் பேசும் மேற்குலகிற்கும்
சிறிய விடயமாகத்தான்
இருந்துவருகின்றது.
மிருகவதைக்கு எதிராகவும்
காடழிப்பிற்கு எதிராகவும்
குரல்கொடுத்துவர்கள் கூட
எதிரிகளாகத்தான் இருந்தார்கள்
சிரிய மக்களுக்கு…

வரலாறு நெடுகிலும்
அழிவையும், ஆக்கிரமிப்பையும்
சந்தித்துவரும் சிரியாவிற்கு
இது ஒன்றும் புதிதல்ல..
இன்ஷா அல்லாஹ்!
சிரியாவின் விடியலுக்காய்
அழுவோம்!
தொழுவோம்!

– ரூமி ஹாரிஸ் –