130 மில்லியன்
80 மில்லியன்
75 மில்லியன்
70 மில்லியன்
எனும் எண்ணிக்கையில் இத்தளங்கள் உறுப்பினர்களை கொண்டுள்ளனர். இவர்களுள் சாதாரண மக்கள், மாணவர்கள், சமயத்தலைவர்கள், அரசியல்வாதிகள், உயர்தொழில் வகிப்போர், உலகத் தலைவர்கள், பிரபலங்கள், என வேறுபாடின்றி சகலரும் இணைந்துள்ளமை விசேடமானதாகும். இவர்களை கேட்டுப்பார்த்தால் இருக்கின்ற நண்பர்களுடன் உறவுகளைப் பேணிக்கொள்வதற்கும், புதிய நண்பர்களை உருவாக்கிக்ககொள்வதற்குமே இத்தளங்களை பயன்படுத்துவதாக கூறுகின்றனர். ஆனால் இன்று இத்தளங்கள் மூலமாக புதிய நண்பர்கள் கிடைக்கின்றனரோ இல்லையோ ஏராளமான நண்பர்களின் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தளங்களில் நாம் என்ன செய்கின்றோம், ஏன் செய்கின்றோம் என்று தெரியாமல் பெரும்பாலானவர்கள் ஈடுபடுவதே இதற்கு காரணமாகும்.
நகைச்சுவைக்காக, விளையாட்டிற்காக என்று பலர் தமது நண்பர்களுடைய (உண்மையான,edit செய்யப்பட்ட) புகைப்படங்களையும், வீடியோக்களையும் இத்தளங்களில் சகலருடைய பார்வைக்காவும் அரங்கேற்றி பின்னர் விளையாட்டு வினையான பல சம்பவங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றன. இதன் மூலம் உறவைப்பேணுவதற்கு மாற்றமாக உறவுகளை துண்டித்துக்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்
யார்தான் விரும்புவார்கள் தனது அந்தரங்க விடயங்களை பார்த்து உலகம் சிரிப்பதை? தனது மானத்துடன் விளையாடுவதற்கு யார்தான் அனுமதிப்பார்கள்;? கவலைக்குரிய விடயமென்னவென்றால் எமது முஸ்லிம்களும் இவ்வாறான கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஒரு முஸ்லிமின் மானத்துடன் விளையாடி தாம் ஏதோ சாதனைகள் புரிந்ததுபோல் மகிழ்ச்சியடைகின்றனர். இவ்வாறு பிறரது மானத்துடன் விளையாடுவது குறித்து நபியவர்கள் எச்சிரித்திருக்கின்றார்கள். நான் மிஃராஜிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தார்களை கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்களுடைய முகங்களையும், நெஞ்சையும் பிளந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள் இவர்கள் தான் மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக்கொண்டிருந்தார்கள் என்று கூறினார். நூல்: அபூதாவூத் (4235)
ஆனால் நாம் இன்று சர்வசாதாரணமாக மற்றவர்களது மானங்களை மிக இலகுவாக சமூகவலைத்தளங்களிலே அரங்கேற்றுகின்றோம். சிந்திக்காமல் comment போடுகின்றொம். மற்றவர்களது கௌரவத்தினை பாதிக்கின்ற பல்வேறுவிடயங்களை share பன்னுகின்றோம். இத்தளங்களிலே அவருடைய நண்பர்கள், குடும்ப உறுப்பினனர்கள், அயலவர்கள், அலுவலக நண்பர்கள் இருக்கலாம். இவற்றையெல்லாம் நாம் மறந்துவிடுகின்றோமல்லவா? இந்த நிலை நமக்கு ஏற்பாட்டால் நாம் சகித்துக்கொள்வோமா?
ஆனால் நாம் நபிவழியினை மறந்து இன்று இவ்வாறான சமூகவலைத்தளங்களின் உதவியோடு இலகுவாகவும், வேகமாகவும் எத்தனைபேருடைய மானங்களில் கைவைத்திருப்போம்? எத்தனைபேரை கேவலப்படுத்தியிருப்போம்? 'ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுடைய கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது ஹராமாகும்' என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க நாம் விளையாட்டுக்காகவும், நகைச்சுவைக்காகவும் சமூக வலைத்தளங்களிலே நமது நண்பர்களின் மானத்தினை ஏலம்போடுவது நியாயம்தானா? எனவே நாம் நம்முடைய நண்பர்களை கீழ்தரமாக எண்ணுவதையோ அல்லது அவர்கள் மனம் நோகும்படி கூறுவதையோ தவிர்க்கவேண்டும். அதை மீறி செயல்பட்டால், நாம் மறுமை நாளின் மீது உறுதியான நம்பிக்கையுடையவர்களாக இருந்தால், நம்மால் பாதிப்புக்குள்ளான சகோதரர்கள் நம்மை மன்னிக்காதவரை நாம் ஒரு அடி கூட எடுத்துவைக்க இயலாது என்பதை உறுதியுடன் நம்பவேண்டும். சிந்திக்கமறந்துவிட்டோமல்லவா…..
எம். எச். அஹமத் ரூமி.

