Jul 30, 2011

கசப்பான (ரமழான்) நினைவுகள் - கவிதை


கசப்பான (ரமழான்) நினைவுகள்

மஃரிபுத் தொழுகைக்குப்பின்
கூட்டமாய் கடற்கரையில்,
ரமழான்மாத
தலைப்பிறை பார்ப்பதில்
பெரியவர்களைவிட
எங்களுக்குத்தான் ஆர்வம்...

ரமழான் என்றால்
எம்பிஞ்சு நெஞ்சங்களில்
ஒரே குதூகலம்...

பல போராட்டங்களோடு
வரிசையில் நின்றுபெற்ற
நோன்புக் கஞ்சியை
இடைநடுவே பசியாறியவேளை
மீதிக்கஞ்சியும் பாதிவழியில்
சிந்தப்பட்ட தருணங்கள்...

சைக்கிள் சவாரி,
மாலையில் கடற்கரை
இப்படித்தான் எங்கள்
சிறுபராய
நோன்புகள் நகர்ந்தபோயின...

இஷாத் தொழுகையோடு
வீட்டுக்குள் அடைக்கப்படும்
எங்களுக்கு
ரமழானில் மட்டும்தான்
இரவில் விடுதலை…

நோன்புக்கடை,
பள்ளி செல்வதாய் இரவில்
நண்பர்களோடு ஊர்உலா,
வேடிக்கை விளையாட்டுக்கள்,
திருட்டு இளநீர்,

இப்படித்தான் எங்கள்
சிறுபராயத்தின்
ரமழான் இரவுகள் கழிந்துபோயின.

இந்த கசப்பான நினைவுகளை
மீட்டும்போது
கைசேதமான
அந்த ரமழான்கள்...

சிறுவர்களாய் இருந்தபோது
சிறுமைப்படுத்திவிட்டோம்
அறியாமல் ரமழானையும்...

இறைவா!
எமது பாவங்களை போக்கி
வரும் ரமழானில்
ரஹ்மத் செய்வாயாக...