ஓசியில கிடச்சா இப்புடித்தான்...
இன்று காலையில் எனக்கு ஒரு இப்தார் அழைப்பிதழ் கிடைத்தது. அது அழைப்புப்பணியில் ஈடுபடுகின்ற ஒரு இஸ்லாமிய நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. நான் அந்த அழைப்பிதழை பார்த்ததும் ஆச்சர்யமடைந்த அதே நேரம் இந்த அமைப்புக்களை பற்றி சிந்திக்க தூண்டியது. என்ன அதிசயம் என்றால் இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் எந்தவித தவறுமில்லை. ஆனால் அதற்கான ஏற்பாடுகளில் என் கையில் கிடைத்த இந்த அழைப்பிதழ் அதியுயர்ந்த விலையில் அச்சிடப்பட்டிருந்தது. இதுதான் இங்கே சிந்திக்கப்படவேண்டியது. மின்னஞ்சல்கள் மூலமும், ளுஆளு மூலமும் அழைப்பிதல்கள் பரிமாறப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் ஒரு சம்பிரதாயத்திற்கு அழைப்பிதழை அச்சிடுவதில் தவறுகளில்லை. அனால் பொதுமக்களின் நிதியில் இயங்குகின்ற சமூக அமைப்புக்கள் இவ்வாறு வீன்செலவுகளை மேற்கொள்வது முட்டாள்தனமல்லவா….
நானறிந்தவகையில் இந்த அமைப்பு மக்களின் நன்கொடைகளின் மூலமும், நிதியுதவிகள் மூலமுமே நிர்வகிக்கப்படுகின்றது. எனவே பயனுள்ள திட்டங்களில் இந்த நிதியினை பயன்படுத்தவேண்டியது உரிய அமைப்புக்களின் பொறுப்பாகும். பொதுமக்களும் அவ்வாறனதொரு நல்ல நோக்கில்தான் நன்கொடைகளை வாரி வழ்ஙகுகின்றனர். சமூக அமைப்புக்கள் ஒரு ரூபாவை செலவிடுவதற்குக்கூட சிந்திக்க வேண்டும். ஏனெனில் இது சமூக அமானிதம். இனியாவது சிந்திப்போம்.